லக உயிர்களின் ஜீவனத் துக்கு காரகனாகிய குருபகவான் சூரியனின் கடும் வெப்பத்தின் தாக்கத்தை குறித்து மஞ்சள்நிற கதிர்களை பரப்பி புவியில் உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கு வழிசெய்கிறது. உருவத்தில் பெரிதாக இருக்கும் குரு அனைத்து கிரகங்களையும் ஆளுமை செய்கின்றது. அதனால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகிறோம். அதாவது சிறிய காந்த துண்டுகள் பெரிய காந்தத்தால் கவர்வதுபோல் உடல் பருமன் என்பது கொழுப்பு சத்தினால் உண்டாவது. குரு பெரிய உருவத்தை குறிப்பது. அதனால்தான் கொழுப்புத் தன்மையை குருவின் காரகத்துவமாக குறிப்பிடுகின்றோம்.

Advertisment

ஒரு மனிதனை உயிரோடு வைத்திருப்பது அவனுடைய மூச்சுக்காற்றுதான் பிராண சக்தி என்று மூச்சுக்காற்றை குறிக்கும் கிரகமாக குரு இருப்பதனால்தான் அவரை உயிர் காரகத்துவமாக குறிப்பிடுகின்றோம்.

அந்த பிராண சக்தி செல்லும்வழி நமது மூக்காகும். அதனால் மூக்கு குறிப்பது குருவாகும். உடல் உறுப்புகளில் பெரிதாக பெரியவை குருவுக்கு சொந்தமானவை..

gg

Advertisment

உடல் உறுப்புகளில் மிகவும் பெரியதும் நீளமானதும் தொடைதான். அதிக கொழுப்பு தங்கியிருக்கும் இடமும் இங்குதான். உள் உறுப்புகளில் பெரிதாக இருப்பது கல்லீரல்.

இது இரண்டையுமே குறிக்கக்கூடியது குருதான்.

குரு மஞ்சள் நிறம் என்பதால் மஞ்சள்நிற உலோகங்கள் அனைத்தையும் குறிக்கக்கூடியவர். அதனால் உருவத்தில் பெரியதான யானையும் குருவை குறிப்பதே. அதிகமான பிராண சக்தியை வெளியேற்றும் அரசமரம். ஆலமரம் போன்றவர்களை குருவின் காரகத்துவத்தை குறிப்பதே.

குருவின் நிறம் மஞ்சள்... தீபத்தின் நிறமும் மஞ்சளே.

மஞ்சள் மற்றும் தீபமில்லாத வழிபாடு என்பது நம் நாட்டில் இல்லை.

இந்த ஒளி மிகுந்த தன்மையால்தான் இருளடைந்த பாவகங்களை குரு பார்க்கும்பொழுது அந்த பாவகம் பலமடைகின்றது.

மனிதனுக்கு அதிகமான பிராண சக்தி கிடைக்கக்கூடிய இடம் வாஸ்து. முறைப்படி பார்க்கும்பொழுது வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலை ஆகும். அதனால்தான் பிராண சக்தியை அளிக்கும் குரு இந்த மூலைக்கு அதிபதியாகிறார்.

இதனால்தான் வாஸ்து சாஸ்திரத்தில் வடகிழக்கு மூலையை குருமூலை அல்லது ஈசானிய என்கிறோம்.

இந்த மூலையை அடைத்துவிட்டால் மனிதனுக்கு சுவாசம் கிடையாது. அதுபோன்று ஈசான மூலை முழுவதுமாக கிடைத்துவிட்டால் வீட்டில் இறப்புகள் நிகழும். சந்ததிகளும் வளராது என்று கூறப்படுகின்றது.

ஆன்மிகத்துடன் தொடர்புடைய பிராணாயம பயிற்சிகள் யாவும் குருவின் தன்மைகொண்டது.

கடக ராசியில் 5 டிகிரி பூசம் இரண்டாவது பாதத்தில் உச்சமடைகின்றார். உத்திராடம் இரண்டாம் பாதத்தில் நீசம் அடைகிறார்.

குரு ஒரு ஆன்மிக கிரகமாகும். குரு, சனி இணைவு சூனியத்தை குறிக்கும்.

குரு ஜீவாத்மா சனி என்பது சூனியத்தை குறிக்கும். இவர்களின் இணைவு சமாதி நிலையாகும்.

பொதுவாக சந்திரன் மன சஞ்சலத்தை குறிப்பவர்.

எவன் ஒருவன் தன் மனதை அடக்கி ஆள்கிறானோ அவனே முக்திநிலை என்னும் மோட்சநிலையை அடையமுடியும்.

இதை குறிப்பதற்காகவே குருபகவான் கடக ராசியில் உச்சம்பெறுகிறார்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கியஸ்தானத் திற்கு காரக கிரகமாக இருக்கும் குருபகவான் எத்தனை சிறப்புகள் பெற்றிருந்தாலும் தான் இருக்கும் இடத்தை காட்டிலும் பார்க்கும் பாவகத்தையே அதிகம் வளப்படுத்துகிறார். என்றாலும் இருக்கும் பாவகம் சுபத் தன்மை அடையும் என்பது பொதுவான ஒரு ஜோதிட விதி.

ஆன்மிக வீடான தனுசில் குருபகவான் மூலத்திரிகோண வலு பெறுகிறார்.

பொதுவாக தனுசில் அமரும் கிரகங்கள் பெரிய அளவில் தீமை செய்வதில்லை.

சுக்கிர அணியை சேர்ந்த லக்னங்களான ரிஷபம், துலாம், கன்னி, மகரம், கும்பம் போன்ற லக்னங் களுக்கு குருபகவான் பார்வை சிறப்பு செய்தாலும் விசேஷமற்ற ஆதிபத்திய பலன்களையும் தரவல்லவர்.

துலா லக்னத்திற்கு முழுவதும் தீமை செய்யக் கூடியவர் குருபகவான்.

ரிஷபத்திற்கு அஷ்டமாதிபதியாக வந்தாலும் அவரே லாப ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதனால் ஆசைகளுக்கு பின்னால் ஒரு அவமானமும் அவமானத்திற்கு பின்னால் அபிலாசைகளை நிறைவேற்றலும் ஜாதகரின் வாழ்வில் ஒளிந்திருக்கும்.

லக்ன பாவியாக இருந்தாலும் குரு என்ற ஒரு முழு சுப கிரகம் லக்னத்தை பார்க்கும் நிலையில் சுபதன்மையை மேம்படுத்தவர் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

ஒருவர் ஜாதகத்தில் அதிகமான கிரகங்களோடு குரு தொடர்புகொள்ளும் நிலையில் ஜாதகரின் வாழ்வு பிரகாசமாகவே அமையும். அதனால்தான் தனித்த குருவை காட்டிலும் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும் குரு தான் கெட்டாலும் மற்ற கிரகங்களை புனிதப்படுத்தக்கூடிய தன்மையுடன் இருப்பார்.

குருவின் அருளாசி நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட நீதி, நேர்மை, நியாயம், ஒழுக்கத்தோடு வாழ்வது மட்டுமல்லாமல் சித்தர்கள் ஜீவசமாதிகள், ஆன்மிக மதப் பெரியோர்கள், மதகுருமார்கள் வழிபாடும் நம் வாழ்வில் உச்சத்திற்கு நம்மை கொண்டுசெல்லும்.

குரு வாழ்க குருவே சரணம்.

செல்: 9952543925